தெருப்பாடகன் - மனப்போக்கு பகுதி 1

பழகுங்கள் பரவசம்
பாடைகள் இலவசம்

அவலங்கள் பேரிசை
ஆர்ப்பரிப்புகள் மெல்லிசை

சுய உணர்வு அனைத்தும் கர்வம்
சூட்சுமங்கள் எல்லாம் சுயநலம்

பிதற்றல்களே
காணாமல் போன அறிவிப்புகள்

ஒருவன்
மனிதனை தேடுகிறேன் என்றான்
மற்றொருவனோ
எங்கே தொலைத்தாய் என்றான்
மூன்றாமவனோ
இல்லாத ஒன்றை
தொலைப்பது எப்படி என்றான்

தேடுதல் அறிவிப்புகள்
தொடர்கின்றன

காணாமல் போனதை
இருவருமே தேடுகின்றனர்
நம்பிக்கை இல்லாதவர்களும்
நம்பிக்கை உள்ளவர்களும்
ஆம்
கிடைக்கும்
எனும் நம்பிக்கை இல்லாதவர்களும்
கிடைக்காது
எனும் நம்பிக்கை உள்ளவர்களும்

சேர்ந்தே தேடுகின்றனர்.

எதிர்நிலைக்கோட்டில்
நேர்நிலைப் புள்ளிகள்
இரு துருவங்களாக
நம்பிக்கை எனும்
இழையால இணைக்கப்பட்டு.

இதில் மூன்றாமவன்
வேடிக்கை பார்க்கிறான்
கிடைத்தால்
தனது முயற்சியால் என்று
உரக்கக் குரல் குடுக்க !

பழகுங்கள் பரவசம்
பாடைகள் இங்கு இலவசம்

எழுதியவர் : மங்காத்தா (10-Jun-13, 6:25 pm)
பார்வை : 108

மேலே