மண்ணுக்குள் கோட்டை

மண்ணுக்குள்ளிருந்தே
அமைதியாகவும்
எந்த சத்தமின்றியும்
எந்த சலனமும் இல்லாமல்
கோட்டைக் கட்டுகின்றாய் ...!

வானம் மட்டும் உன்னிடம்
அன்பு கொண்டு மகிழ்கின்றதே
அண்ணன் தம்பிகளாய்
தாய் தந்தையாய்
உறவு முறைகள் வளர்க்கின்றாயே ...!

நீங்கள் (கடலை ,கிழங்கு ) வெளியே வந்ததும்
அள்ளி மகிழ்ந்து பரவசம் அடைகின்றனர்
மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்...
நீங்கள் கட்டியக் கோட்டைகள உங்களால்
திரும்ப கட்டும் வரை ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (12-Jun-13, 10:55 pm)
பார்வை : 88

மேலே