தவ மழை

யாகம் செய்து
தியாகம் செய்து
தவளைக்கு திருமணம்
செய்து
கழுதைக்கு மறுமணம்
செய்து
ஊர் பெரியவர்
வெட்டிய மரங்களுக்காக
மன்னிப்பு கேட்டு
மேகத்திடம் மன்றாடி
விவசாயி
வாங்கிய மழையில்
ஒரு போதும்
விரிக்காதீர்கள்

எல்லாருக்கும் தெரிந்த
குடைகளையும்
விடைகளையும்....

எழுதியவர் : கவிஜி (13-Jun-13, 7:37 pm)
பார்வை : 89

மேலே