பலா மரத்தில் வாழைப்பழம் ....???
பலா மரத்தில் வாழைப்பழம்
முளைத்த அபூர்வம் (படம் இணைப்பு)
போதிய நீர் இல்லாமல் வாழை மரத்திலேயே வாழைப்பழம் விளைவிக்க முடியாமல் நம் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கையில், கர்நாடகாவில் பலா மரத்தில் காய்த்த கனிகளுக்கு உள்ளே வாழைப்பழம் முளைத்திருக்கிறதாம்.
கர்நாடகாவில், தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஹலனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தாசப்பாவின் தோட்டத்தில் தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. வெளியே முள்ளோடும், உள்ளே இனிப்பான சுளைகளோடும் காட்சியளிக்கும்
பலாப்பழங்கள் மரத்தின் வெளியே ஒட்டிய படியே வளரும். ஆனால், தாசப்பா வீட்டுத் தோட்டத்திலுள்ள பலா மரத்தில் காணப்படும் ஒரு பலாப்பழம் அசப்பில் வாழைத்தாஅரை நினைவூட்டுவது போலவே உள்ளது.
இது குறித்து பெங்களூரில் இயங்கி வரும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி கே.வி.ரவிசங்கர் கூறியதாவது, ‘ பலாப்பழத்தில் வாழைப்பழச்சுளைகள் முளைத்திருப்பதற்கு உடலியல் மற்றும் மரபணு குறைபாடே காரணம். இது ஒரு அறிவியல் விந்தை’ என
விளக்கமளித்தார். ஆனால், அப்பகுதி மக்கள் இதனை நல்ல சகுனம் எனக் கூறியதால், தாசப்பா பலா மரத்திற்கு பூஜைகள் செய்து, பலா மரத்தை தரிசிக்க வருவோருக்கு பிரசாதம் வழங்கி வருகிறாராம். இச்செய்தி காட்டுத்தீ போல பரவியதால், கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்காணோர் தாசப்பா வீட்டுத்தோட்டத்தில் குவிந்தனர்.
நன்றி தகவல்