குழலிசை - சி.எம்.ஜேசு
ஒய்யாரமாய் வளர்ந்து
பரந்து விரிந்த மூங்கில்
காடுகளில் பறக்கும் வண்டுகள்
வாழ வலைத்தேடித் திரிந்து
வலைக் கிடைக்காது - மூங்கிலில்
துளையிட்டு அமர்ந்து பறந்தநேரம்
மெல்லியத் தென்றல்
சொல்லும் சொல்லினைப் போல்
மூங்கில் துளைகளில் நுழைந்து
வெளிவர வழித் தேடி
முட்டி மோதி மூங்கிலை
அசைத்து இசைக்கும்
இசையே குழலிசை !