மரணம் என்ற ஒன்று
மரணம் என்ற ஒன்று இருக்கிறது,
வாழ்க்கையில் மரணம் என்பது
அனைவர்க்கும் உண்டு – எனவே
வாழும் வரையில் நல்லவனாய் இரு!
மரணம் இருப்பதை அறிந்திருந்தும்
தவறுகள் செய்வதை நிறுத்தவில்லை,
மரணம் உறுதியெனத் தெரிந்தாலும்
தவறுகள் தொடர்ந்து புரிகின்றாய்!
ஒன்று மட்டும் புரிகிறது,
தெரிந்தே தவறுகள் செய்பவன்
தண்டனை பெறுவதும் உறுதி,
புழுவாய்ப் பிறப்பதுவும் உறுதி!
தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.
திருக்குறள் 236