உள்ளமும், உறவும்

உள்ளமும், உறவும்
இருச்சக்கர வாகனங்களின் சக்கரங்கள்...
உன்னை உருவாக்குவதும்
உருகுலைப்பதும் - உன் உள்ளமே!
அவ்வுள்ளத்தை உரசிப்பார்ப்பது - நீ
கொண்டுள்ள உறவு மட்டுமே!
உறவை உன்னதமாய்
உண்மையாய் நேசித்தால்
உள்ளம் உன்னை
உருவாக்கும்.
ஊசி துவாரம் பிரிவு ஏற்பட்டாலும்
உள்ளம் சருகுகளில் தீயாய்
கருகிவிடும்,
கலங்கி நிற்கும்.
பிறருக்காக நல்உறவை
உதாசீனம் படுத்தாமல்
பகுவமாய் உறவை நேசித்தால்
பிணியின்றி உன் உள்ளம் வாழும்,
பிரிவின்றி உன் உறவு தொடரும்.
வாழுங்கள்
நல் உறவோடு
நல் உள்ளதோடு.... வாழ்த்துக்கள்.