பிள்ளை ஒன்று கொடு இறைவா
சராசரி மனிதன்
சங்கடங்கள் நிறைந்தவன்
வாரிசே இல்லாத
வாழ்க்கையை வாழ்பவன் நான் ..................
எதிர்கால கணவில்லாத
நிகழ்காலதுன்பத்தில் திளைப்பவன்
நாளைய வாரிசிற்க்காக
இன்றுவரை ஏங்குகிறேன் ............
ஓடி ஓடி உழைத்தும்
ஓய்வில்லாமல் சேர்த்தும்
அனுபவிக்க பிள்ளையில்லை
அர்த்தம் இல்லாத என் வாழ்க்கையில் ...........
அள்ளி அணைக்க நெஞ்சு காத்திருந்தும்
ஆசையாய் கொஞ்ச கனவுகள் பூத்திருந்தும்
மனைவி அவள் மடிகனக்கவில்லை
மகிழ்ச்சி பொங்கும் பிள்ளை இல்லை ..............
உறவு பிள்ளைகளை எல்லாம்
தன்பிள்ளையாய் நினைத்து
மனம்தேற்றி வாழ்ந்தபோதும்
மறந்துபோவதேன் அவர்கள் மட்டும் ............
ஆசை முழுக்க அவர்கள் மேல் வைத்து
அன்பாய் காத்து வளர்த்து
தன்பிள்ளை எனதிருந்தேன்
தலைநிமிர்ந்து வாழ்ந்திருந்தேன் ............
பாசம் வைத்த பிள்ளையெல்லாம்
நேசம் மறந்து போனபோது
நெஞ்சு வெடிக்க துன்பம் கண்டேன்
நிலைகுலைந்து மனம் நொந்தேன் ..........
அப்பா என்ற பிள்ளை இன்று
யாரோபோல் ஒதுங்கிபோக
மனம் உடைந்துபோனது
உடல் தளர்ந்துபோனது ...............
பெற்றெடுக்கவும் பாக்கியமில்லை
வளர்தெடுத்ததாலும் பயனுமில்லை
நடுத்தெருவில் விட்டுவிட்டு
வந்த உறவும் ஓடிப்போச்சே ..............
ஓடிவிளையாட வீடிருந்தும்
அள்ளிக்கொட்ட அன்பிருந்தும்
அரவணைக்க மனம் இருந்தும்
வாரிசு இல்லாததால் நாங்களும் அனாதையானோம் ................
ஆசைக்கு ஒன்றும்
ஆஸ்திக்கு ஒன்றும் தேவை இல்லை இறைவா
அன்பான பிள்ளை ஒன்றை கொடு
அதையும் அவ்வளவு சீக்கிரத்தில் கொடு ..............