ஒரு கரு பேசுகிறது!
அம்மா!
நான் உன்னில் கருவாய்
இப்போதுதான் உதித்திருக்கிறேன்!
நான் ஆணா பெண்ணா தெரியவில்லை!
பெண் என்று தெரிந்ததும்
கருவிலேயே அழிக்க
நீ திட்டமிடுவது புரிந்து விட்டது!
எல்லா அம்மாக்களும் திட்டமிடுவதில்லை!
நீ திட்டமிட்டு விட்டாய்!
இருக்கட்டும்!
ஆனால் --- நான் ..........
ஆணாக பிறந்தாலும் .....
அவதரமாகத்தான் பிறப்பேன்!
பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை
கருவறையிலிருந்து கல்லறை வரை
தடுக்கும் அவதாரமாக!
பெண்ணை ஏன் மதித்துப் போற்ற வேண்டும் என
உலகுக்கு சொல்லும் அவதாரமாக!
உன்னையே பெண்சிசுக்கொலைக் கெதிராய்
பிரச்சாரம் செய்யும் பெண்ணாய்
உருமாற்றும் அவதாரமாக!
நீயே முதுமையிலும்
என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்று
உபதேசிக்கும் 'அன்னை சுவாமி' அவதாரமாக!
தெய்வங்களில் அஷ்டலட்சுமி போல
மனிதப் பெண்களிலும்
துறைக்கு ஒரு லட்சுமி உண்டு என்று
உலகுக்கு காட்டும் அவதாரமாக!