பரிசு

உனகென்ன சொல்லிவிட்டாய்
உறக்கமின்றி அவதிப் படுவது
நானல்லவா?

உன் பிறந்த நாளுக்கு
யாரும் கொடுக்காத பரிசு
நானெப்படி கொடுப்பது?

ஒரு முறை உனக்கு
உயர்ரக முத்துமாலைக் கொடுத்த போது
உன் பற்களைப் பார்த்ததால்
அது கருத்து போனது

தங்க வளையல்கள் கொடுக்க
எனக்கு விருப்பமில்லை
உன் நிறத்திற்கு முன்
அது மங்கிப் போய்விடும்

உயிருள்ள பறவைகளையோ
விலங்கையோ கொடுத்தால்
எனக்குத் தரும் அன்பை
அவைகளுக்கும் பங்கு போட்டு கொடுத்துவிடுவாய்

உன்னுடன் திரையரங்குக்குச் சென்றால்
உன்னுடன் பேசாமல் என்னால்
அந்த முன்று மணி நேரம்
பொறுமை காக்க முடியாது

உன்னைச் சுற்றுலாவுக்கு
அழைத்துச் செல்லவும் முடியாது
அங்கு உன்னைச் சுற்றிச்சுற்றி
உலா வருபவர்களுக்கு என்னால் துன்பம் நேரலாம்.

உனக்கு
கவிதை புத்தகங்களைப் பரிசளிக்கலாம்
ஆனால்
அது கொல்லன் தெருவில்
ஊசி விற்றது போல் ஆகிவிடும்

நான் தீர்மானித்து விட்டேன்
என்னைத் தவிர உனக்கு
பரிசளிக்க என்னிடம் என்ன இருக்கிறிது?
நான் வெறும் கையோடு புறப்பட்டுவிட்டேன்
உன்கைகளில் என்னைப் பரிசளிக்க.

எழுதியவர் : த. எழிலன் (16-Jun-13, 11:16 pm)
சேர்த்தது : vellvizhe
Tanglish : parisu
பார்வை : 46

மேலே