நல்ல மனையாள்

மனமொரு கோவிலாய்
குணத்தில் அன்பைவிதைத்து
அகம்பூத்து கருணைகொண்டு
அனைவரையும் நேசிப்பவள் .........

மனந்தவனையே மணாளனாய்
மானசீகமாய் நேசித்து
அவனுக்காய் வாழ்ந்திருந்து
மனம்கோணாமல் நடப்பவள் .............

கணவனின் மனம்புரிந்து
கண்ணசைவில் குணமறிந்து
சூழ்நிலைக்கு ஏற்றவாறு
சூட்சமம் புரிந்து நடப்பவள் ............

அவனுயிரை தனதுயிராய்
அவன் நலனே தன்னலனாய்
இறுதிவரை வாழ்ந்திருந்து
இணைபிரியாமல் இருப்பவள் ...........

மனம்நோகும் ஓர் வார்த்தையும்
மனம்தளரும் ஓர் செயலும்
செய்யாதிருப்பவள்
என்றும் சிக்கனமானமாய் இருப்பவள் ........

உழைத்து சோர்ந்த கணவனுக்கு
ஊட்டமாய் இருப்பவள்
துன்பத்தில் திளைக்கும் கணவனுக்கு
தூணாய் இருப்பவள் .............

சிலசமயம் தாரமாகவும்
பலசமயம் தாயாகவும்
கணவனது அக்கரைதேடி
கண்ணகியை வாழ்பவள் ............

தொட்டுதழுவும் பந்தத்தோடு
விட்டுகொடுக்கா மனதோடு
கணவனின் புகழ்கெடுப்போரை கடிந்து
கணவனின் புகழ் காப்பவள் ...........

உண்மையதை மறைக்காமல்
பொய்யை என்றும் கூறாமல்
குடும்ப நலனிற்கு உழைத்து தேய்ந்து
உளமார கரைபவள் ...........

பிறந்துவீட்டு பெருமையோடு
புகுந்துவீட்டு பெருமையையும்
இனம்பிரிக்காமல் காப்பவள்
இன்முகத்தோடு வாழ்பவள் .........

முகமழகு சேர்த்து
மனதழகு கொண்டவளாய்
கணவனின் அன்பு
கட்டளைகளை மீறாதவள் ..........

பிறந்து வளரும் குழந்தைக்கு
ஒழுக்கம் சொல்லி வளர்ப்பால்
கல்வியறிவு வளரவேண்டி
கற்றுக்கொடுப்பால் ஆசிரியரிப்போல் .........

மூத்தவர்களுக்கு மதிப்பளித்து
மனதார சேவை செய்து
அவர்கள் ஆசிதனை பெற்றிடுவாள்
நல ஆசிர்வாதங்களோடு வாழ்ந்திடுவாள் ..........

நலமனையாள் இருக்குமிடம்
நலம் எல்லாம் குவியும் இடம்
நல்ல மனையாள் கிடைத்தவர்கள் எல்லாம்
பூமியிலே சொர்க்கம் காண்பார் !

எழுதியவர் : வினாயகமுருகன் (18-Jun-13, 12:01 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 133

மேலே