சில்லென காதல் நெஞ்சில் .................
விட்டு கொடுப்பது காதலுக்கில்லை
தட்டி பறிப்பதும் அதன் வேலை இல்லை
மனதை மயக்க செய்வதே வேலை
மனம் படிந்தால் சுவாசத்திற்கு தொல்லை
ஊமையாகும் மனம்
பாரமாகும் நெஞ்சம்
காணாமல் போகும் சிரிப்பு
கவிதையாகும் அவள் மௌனம்
ஒற்றை பனித்துளியும்
அதிலும் சூரியனாய்
மனம் காணும் தவிப்பு
மரணம் வரை தொடரும்