நினைவுகள் தொடர்கதை

நினைவுகள் தொடர்கதை

எரித்த காகிதவாசங்கள்
எழுதிடும் பிரிவு சாசனங்கள்

வான்வழி உலாவிய
மேகத்தூரலில் உப்புக்கரிசல்

மழலைத்தாங்கிய
மரக்கிளையாய்
துதிபாடிய சுமைநிசிகள்

அனாதை முகவரியான
வெறுமைக் கூடுகள்

யாரோ ஒருவரின்
வரவினை எதிர்ப்பார்த்து
தன்னைத்தானே சுழற்றுகிற சாபமேனோ

புலம் பெயர்ந்த
ஜாதிப் பறவைகளின்
பருவகாலம் நெருங்கிட

நிறைவேறுமா இன்னொரு
துளிர்விடும் வசந்த காலங்கள்

காலி ஏனங்களாய்
தாளம் தட்டிடும்
அர்த்தமில்லாதத் தனிமைகள்

கடப்பிதழளவு புகைப்படங்கள்
கருப்பு வெள்ளைக் காலங்களோடு
கையிலேந்தியபடி லயித்துவிடுகையில்

அழித்திட இயலா
சேமிக்கப்பட்ட வலித்தரவுகளின்
இருப்பிடங்களாக ஆழ்மனக்கோப்புகள்

குறுந்தட்டில் அடைப்பட்ட
முகாரி இராகங்களாக
குரலின் மென்னயத் தளர்பாடுகள்

வாழ்க்கை வட்டகையில்
இடறிய நசுங்கல்களின்
விரலெண்ணிக்கை தொடரிகள்

நெடுநாட்களாக பூட்டிய அறையில்
தணிக்கை செய்யப்படாத
நாட்குறிப்பு புத்தகத்தினூடே

தட்டச்சு செய்திட்ட
சில கரிப்படித்தாள்களில்

ஞெகிழியாய் ஒட்டிச்சுவறிய
காலம் தப்பிச்சென்ற ஓர்மைகள்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (22-Jun-13, 8:13 am)
பார்வை : 243

மேலே