கருவின் கதை
![](https://eluthu.com/images/loading.gif)
அரு எனக்கு
அவனியில்
அமிழ்தான
அவள் வயிற்றில்
அழகான பிள்ளையாக
அருள் வழங்கினான்
அன்று அரு.......
ஆனந்த நேரத்தில்
ஆசைக் கணவனுடன்
ஆம்பல்
ஆடை கலைந்த நேரம்……..
இது உன் நேரம்
இனி பொன் நேரம்
இவள் வயிற்று
இருளில் முந்நூறு நாள்
இருள் விலகி நன்றாக வாழ்
இறைவன் எனையழைத்து
இறுதியாகச் சொல்லி ......
ஈன்றேடுப்பவள் வயிற்றில்
ஈகை வேந்தன்
ஈசன் எனை
ஈந்தான்...
உவகை கொண்டு
உமையவள்
உதிரம் கொண்டு
உலகம் காண அருவிலிருந்து
உருவாக
உதித்தேன்
உயிர் அவள் கருவில்......
ஊழ் எனை
ஊறிய
ஊனாக
ஊற்றி இழைத்தால் ...
எழில் வயிற்றில்
எலும்பொடும் தோலொடும்
என் உயிரை
எழு தினமும்
எதிலும் குறையின்றி
எனை வளர்த்தால்....
ஏடு போல்
ஏமந்த ருதுவில்
ஏர்புடன்
ஏழை அவள்
ஏந்த
ஏகாந்த உலகம் காண.....
ஐயள் வயிற்றில்
ஐம்பொறி செழித்து வளர
ஐந்துண்டி சேர்த்து......
ஒருக்களித்து
ஓய்யாரமாய்
ஒளிவீசி.....
ஓவியம் போல் படுத்து
ஓர் நாள்
ஓட்டடுக்கு வீட்டில்
ஓகையுடன் பூவுலகில்
ஓம்பினால் உரு.......
உரு ஈந்த
திரு இவள்
திரு மேனி முன்
அரு அவன் புகழ்
சிறு துரும்பு என
திரு அவள்
உரு கட்டினேன்.....