இயற்கையெனும் மங்கை

பசுமைத் துள்ளல் பொங்கிடும் பொள்ளாச்சி
பார்வையில் தங்கிடும் என்றும் நிலைச்சி !

கண்குளிர காணலாம் கவிஞரும் ஆகலாம்
எண்ணங்கள் நிறைந்து எழுச்சி பெறலாம் !

இயற்கை என்றும் எழில்மிகு மங்கையவள்
இமைவழியே இதயத்தைத் தொடுவாள் !

இறுகிய நெஞ்சை இதமாக்கி வருடுவாள்
இன்னல்கள் மறந்து இனபம் தந்திடுவாள் !

பசுமைச் சூழல் கண்ணில் பட்டால்
சுமைகள் இறங்கி அமைதி நிலவும் !

இயற்கை வளம் என்றும் நிலைத்திட
இதயங்கள் நாம் இணைந்து நிற்போம் !



( பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை
செல்லும் வழியில் இந்த காட்சி )


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Jun-13, 7:21 am)
பார்வை : 108

மேலே