மோகினி(நீ)

பட்டப் பகலில்
உன் தெருவில்
மோகினி நடமாட்டம்டா என்று
பயத்தில் அரற்றும் நண்பனுக்கு
எப்படி விளக்கி சொல்வது
அது
எதிர் வீடு மொட்டை மாடியில்
ஈரக்கூந்தலை உலர்த்த வந்து நின்ற
நீ என்று .

எழுதியவர் : devirama (24-Jun-13, 8:08 am)
சேர்த்தது : devirama
பார்வை : 73

மேலே