விதிக்கும் விதிகள்
விதிஎன்று வீணாய் பேசிடுவோர்
விதிக்கும் விதிகளை மறந்திடுவர் !
வீதிகள் யாவையும் பொதுவானதே
விதிகளும் அதில் அடக்கம்தானே !
ஆண்டிக்கு ஒரு விதிஎன்றால்
அரசுவண்டிக்கு ஒரு விதியா?
காவல்துறை பதாகை என்ன
குப்பனுக்கும் சுப்பனுக்குமா ?
அரசுக்கு சொந்தம் என்றாலே
பாமரனுக்கும் பங்கு உண்டே !
விதிமீறல் எதிலும் கூடாது
விளைவிற்கு வித்தாக மாறுது !
( இது பொதுநலம் கருதியே எழுதியது )
பழனி குமார்