எதைச் சொல்வது ?

பார்த்ததையே பார்த்துக் கொண்டு
கேட்டதையே கேட்டுக் கொண்டு
பேசினதையே பேசிக் கொண்டு.
வாழ் பவனிடம் என்ன செய்வது ?
தன்னாலே தெரிந்து கொள்ளமல்
பிறர் சொல்லியும் அறிந்து கொள்ளாமல்
திறனற்று அலைபவனிடம் எதைச் சொல்வது
எதை விடுவது என்று புரியவில்லை.