லிமரைக்கூ : பாவம் தவிக்குது சாமி....!

இரும்புக்கு காதலாம் தென்றலோடு

துருப்பிடித்து தொலைந்தது கண்டு

இதயமே இனியுனக்கு வேலிபோடு ...




கதறித் துடிச்ச ஆட்டோட சாவம்

உழுதவன் எல்லாம் உத்தியோகம் தேட -சாமி

தகரக் கத்தியோட தவிக்குது பாவம்.....





நிழல் மட்டும் துரத்தும் தனிமையும்

நிலவும் ஒளிந்திட நீளும் இரவும்

நினைக்க மறப்பேனா இறைவா உம்மையும் ...



விதைச்ச நெல்லிங்கே விழலாகிப் போச்சு

விடியாத இரவாக விவசாயி உயிராட -இன்னும்

முடியலையே உங்க அரசாங்கப் பேச்சு....

எழுதியவர் : காசி. தங்கராசு (25-Jun-13, 3:50 am)
பார்வை : 130

மேலே