எல்லாம் வரண்டு போகுதே

விண்ணில் பறக்கும் பறவை ஒன்று
ஈரம் தேடுது
தன் தாகம் தீர்க்க
ஒரு முரடு தண்ணீர் கேட்குது

வானம் பார்க்கும் மலரொன்று
பனித்துளி கேட்குது
தன் இதழ்கள் நனைந்திட
மழைத்துளி கேட்குது

கதிர்கள் சுமக்கும் நாற்று ஒன்று
பச்சையம் கேட்குது
விதைகள் செழித்திட
குளிர்ச்சியை கேட்குது

நீந்த தெரிந்த மீனொன்று
ஓடை கேட்குது
ஓடித்திரிய
ஒரு குட்டையை கேக்குது

மார்பை தேடும் மழலைஒன்று
அழுதுபுலம்புது
ஒட்டிபோன மார்பை புடித்து
ஒரு சொட்டு பாலை கேட்குது

எல்லாம் தெரிந்த ஓரிறை
எல்லாம் பார்க்குது
தன் நாட்டப்படி
எல்லாம் நடக்குது என்று
தெரிந்து கொள் என்றது

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (26-Jun-13, 12:27 pm)
சேர்த்தது : nuskymim
பார்வை : 91

மேலே