உன்னால் மனம் சொல்லும் கவிதைகள் ......????????

தேடலில்தான் அனைத்தும் கிடைக்குமென்றாய்
முதலில் சொல்லிகொடு எனக்கு
என்னை கண்டெடுக்க
உன்னை முதன் முதல் பார்த்த போதே
காணாமல் போனவன் நான் ........
**************************************************************************.
ரசித்தால் கவிதை வரும் என்றாய்
எதை ரசிக்க உன்னைப்போல்
ஒரு கவிதையை விட்டு விட்டு
என் முன் கவிதையாய் நீ இருக்கையில்
***************************************************************************
எந்த மெனகிடும் இல்லாமல்
அழகாய் இருப்பவள் நீ
உனக்கு இணையாய் வர
மிகவும் மெனகிடுகிறேன்
அழகாய் இருப்பதற்காய் அல்ல
சரியான பொருத்தமாய் இருக்க
************************************************************************

எழுதியவர் : ருத்ரன் (26-Jun-13, 7:01 pm)
பார்வை : 84

மேலே