உன் விழி பார்வையில்
நா தேவையா...
உன் பூவிதழ் அசைதல் வேண்டுமோ??
காற்றின் துணையோடு
ஒலி வடி கொள்ளும்
உன் மதுர குரல் தேவையோ???
எண்ணித் தீரா
எம் தமிழ் மொழியின் இனிய சொற்க்களும்
தேவை தானோ???
என்னை கண்ணெடுத்து பாரடி!!!!
என் ஆவி பிடுங்கி தின்னும்
உன் பார்வை போதும்
இன்னும் ஆயிரம் ஜென்மம்
என்னோடு காதல் கதை பேச !!!!!!