அலைகளின் நாட்குறிப்பில்..!!!
ஈரம் படர்ந்த மணலில்
நம் பாதம் பதித்தோம்
கை கோர்த்து நடக்கையில்
கடற்கரை ஈரக் காற்றில்
முகம் நனைந்தோம்
விழிகள் நான்கும் பேசியதில்
மனம் மலர்ந்தோம்
எதிர்காலம் குறித்த
நம் உரையாடல்களில்
நெகிழ்வுற்றோம்
அலைகளின் அன்றைய
நாட்குறிப்பின்
பதிவேட்டில் நம்
பாதம் நனைத்து
பாதச்சுவட்டை
பதிவு செய்து
அவரவர் வீடு
திரும்பும் வேளையில்
கண்கள் பனித்தோம்
விதியின் வினையால்
நாம் பிரியப்பெற்றாலும்
அலைகளின் பதிவில் நாம்
இணைந்தே இருப்போம்...!!!!!