முல்லைகள் தந்த மணம் முள் வனம்

இளமை முறுக்கேறி
அலைந்திட்ட நாட்களின்
வளமைமிகு ஞாபகங்கள்
ராட்டினப் பெட்டிகளாய்
மீண்டும் மீண்டும்
தோன்றி மறைய
அதை ரசிக்கக் கூட
வலுவிழந்த மனதுகள்
விடுதியெங்கும் .......

அரைக் கஞ்சி
கால்க் கஞ்சி
அவர் குடித்து
ஆண் பிள்ளை
நாளை நம் வானாவான்
பெண் பிள்ளை
வாழைக் கன்றாவால்
என நாளும்
குன்றாக
வறுமை
மறைத்து
வளர்த்ததன்
பயன்
குவித்தவனையே
குழிக்குள்
சரித்து விட்ட
குன்றுகளால் சேர்ந்த
வயதான கன்றுகளின்
திரளான கூட்டம் இங்கே...

வீட்டுக்கு வந்தவளால்
பூட்டுக்கு வெளியே
பல பேர்
அவள் பாட்டுக்கு
மயங்கி
படைத்தவர்களையே
பரிதவிக்கவிட்டவர்கள்
பல பேர்...

குணமின்றி
நிலை பார்த்து
அவர் உடல்
நிலை பார்த்து
வனம்
அனுப்புவோர் சில பேர்....

பிள்ளையாய்த்
தன் கூன்
செய்த தவறுகள்
பார்த்து
என் பிள்ளை
என் முல்லை என
ஒரு நாளில் கொஞ்சிய
வயதான பிள்ளைகளுக்கு
திருநாளாய்
அந்த
முல்லைகள்
தந்த மணம்
முள் வனம் ....

வனம் தான்
அவர்களின்
இடமென்றால்
உலகில்
குணம் தான்
எங்கே?....

வனம் சேர்க்கும்
மனம் மாற்றி
தினம் அவர்
கணம் காத்து
குணமோடு
வாழுங்கள்....

படைத்தவன்
பரந்தாமன் என
பல கோவில் சுற்றி
தெரியாத
தெய்வங்கள் தேடி
அலையும் வீணர்களே
பாரில் உங்களை
படைத்த நேரில் உலவும்
தெய்வங்களை
நாளும்
நாடி வணங்குங்கள்
அவரைக் கூடி
மகிழுங்கள்....

முள் வனம் சேர்க்க
முயலாதீர்
முள்ளில் விழ
முன் ஏற்பாட்டிற்கான
முதல் சீட்டு
முண்டியடிக்கும்
மூடர்களே
உங்களுக்காகத்தான்.....

எழுதியவர் : நஞ்சப்பன் (27-Jun-13, 12:37 am)
பார்வை : 119

மேலே