ரயில் பயணங்களில்.....

யார் இவர்கள்
இரு கற்களை
தட்டிக்கொண்டு ஒருத்தி
இதற்கு பிச்சை
என்று இன்னொருத்தி
எந்த மாநிலமோ,
பயணசீட்டு இல்லை....
கூட்டம் கூட்டமாய்
பயணம்......
கால் வைக்கும்
இடங்களில் படுக்கையும்
பட்டினிக்கு வாய்திறக்க
ரயில்வே உணவகங்களும்,
பார்பதற்கு பாவமாய்
தோன்ற,
பார்க்கத்தான் முடியும்
நானும், என் ரயில் பயணங்களில்......

எழுதியவர் : (28-Jun-13, 12:18 pm)
சேர்த்தது : ilaiyaraja
பார்வை : 79

மேலே