அன்பே நீ எப்போதும் என்னோடுதான்

அன்பே உனது
நண்பர்களோடு புன்னகை செய்கிறாய்
அது அறியாது இங்கே எனது இதயம் படபடக்கிறது !!!!
அன்பே என்னை
கண்டுகொள்ளாது விழியசைக்கிறாய்
அது அறியாது இங்கே எனது உயிர் துடிதுடிக்கிறது !!!!
அன்பே நீ
எதார்த்தமாய் உதடுகளை சுழிக்கிறாய்
எனது உச்சந்தலை முடி நட்டுகொள்கிறது !!!!
அன்பே நீ
எதற்காகவோ விரலசைக்கிறாய்
இங்கே எனது ரத்தஓட்ட தடம் மாறுகிறது !!!!
அன்பே காற்றினில்
அசையும் உனது கூந்தலே -எனது
எண்ணங்களை பல சமயம் முழு வசியம் செய்துவிடுகிறது!!!!
அன்பே உனது
புருவமத்தியின் குங்குமம்
எனது பூர்வஜென்ம கதையை சொல்கிறது !!!!
அன்பே உன்னுள்
ஏறிஇறங்கும் மூச்சுகாற்றில்தான்
எனது வியர்வை சுரப்பியே வேலை செய்கிறது !!!!
அன்பே நீ
கடித்து துப்பும் நகத்தை கண்டு ஏங்குகிறேன்
என்னை காதலிக்கும் வார்த்தையும் சேர்ந்து வந்துவிடாதா என்று !!!!
அன்பே உன்னோடு
அகம்புறமென்று சங்கமித்து -சாகதுடிக்கிறேன்
அதன் பின்னும் முக்தி இருப்பதை மனம் அறிகிறது !!!!
அன்பே நிஜத்தினில்
நீ தொலைவினில் இருக்கிறாய்
எனது அகஉலகினில் நீ எப்போதும் என்னோடுதான் !!!!
--------------------------------------------------------------------------
என்றென்றும்
அன்புடன்
கார்த்திக்