நான்-சிறு அறிமுகம்..!!!

தேவையே தெரியாது தேவையின்றி
ஓடும் முயல்களின் கூட்டத்தில்

ஆமை நான்!!




குடைபிடித்து நடக்கும்

கோடானக்கோடி இதயங்களுக்கு

எதிராளி நான்!!




சாளரம் திறந்து காற்றுக்கு

வரவேற்ப்பு பத்திரம் -வாசிக்கும்

ரசனைவாதி நான்!!




வார்த்தைகளால் விளையாடும்

கவிஞன் மட்டுமல்ல

சரியும் தவறும்

தாகமும் ரசனையும்

ஆசையும் கண்ணீரும்

ஆத்திரமும் அழுகையும்

முரண்பாடுகளில் வாழும்

அற்ப மானுடமும்....

எழுதியவர் : (3-Jul-13, 12:00 pm)
சேர்த்தது : jan.v
பார்வை : 77

மேலே