துயிலில் ஒரு காதல்

அந்த அந்திசாயும் மாலை
நான் தனித்து அமர்ந்திருந்த பூஞ்சோலை
ஆதரவாய் சாய்ந்திருந்த அழகியமரம்
துணையுடனமர்ந்து பாட்டிசைக்கும் பறவைகள்
இங்குமங்கும் குதித்தோடும் சிறுஅணில்கள்
கூட்டமாக இறைகொள்ளும் புறாக்கள்
அமைதியாய் அமைந்திருந்தது பூங்கா. . . . . . . !

உடலும் உள்ளமும் கொண்ட களைப்பில்
கண்முடி சாய்ந்த அந்த மரத்தினடியில்
எனையறியாமல் கொண்டேன் சிறுதுயில். . . . . . !
உலகத்து பூக்களை எல்லாம்
ஒன்றாக்கிய மயக்கும் நறுமணம்
இதற்கு முன் உணர்ந்த
இடம் அவள் கூந்தலில். . . . . . . . !
என் தேகத்தில் ஏதோ
ஒரு இனிய வருடல்
என்னவள் கூந்தல் தீண்டிய அனுபவம். . . . . . . !

எனை மறந்து துயில் கலைந்து
என் காதலியின்கார்மேக கூந்தலென
எட்டிப்பிடிக்க நீண்ட என் கரங்களை
உரசி தழுவிச் சென்றது
என் நிலை கண்டு சிரித்துக் கொண்டே
அந்த பூஞ்சோலை தென்றல் . . . . . . . . . . . . .!

எழுதியவர் : பொன்ராஜ் (5-Jul-13, 10:30 pm)
சேர்த்தது : ponraj
பார்வை : 63

மேலே