ராணுவ வீரன்

எல்லையிலே காத்துகிடந்து
இரவு பகல் விழித்திருந்து
தொல்லைகள் பல பொறுத்திருந்து
நம்மை காக்கும் ராணுவ வீரன் ...............

உயிரை அவர்கள் துச்சமாய் நினைத்து
உணவு உறக்கம் எல்லாம் மறந்து
காடுகள் மலைகள் எல்லாம் கடந்து
காப்பாற்றுகின்றனர் இந்திய எல்லையை .............

கொட்டும் மழையிலும்
கொளுத்தும் வெய்யிலிலும்
கடும் பணியிலும் கடமை தவறாமல்
நம்மை காத்துக்கொண்டு இருக்கிறார் ...........

இந்திய மண்ணின் மானம் காத்து
எல்லையிலே வாழ்வை கழித்து
இயந்திரத்தோடு இயந்திரமாய்
எந்நேரமும் இயங்குகிறார் .............

கன்னி வெடிகளும் காலில் படலாம்
துப்பாக்கி குண்டுகள் உடலை துளைக்கும்
பீரங்கி வெடிக்க உடலும் சிதறும்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் ..............

உடல் ஊனமாகும் சில நேரங்களில்
உயிர்கள் சாதரணமாய் போகும்
சுயநலம் கொண்ட மனித பூமியில்
பொதுநல தியாகிகள் அவர்களை மதிப்போம் ..........

நமது நலனை பாதுகாக்க
அவரது உயிரை அற்பனித்துள்ளார்
அவர்கள் பணிக்கு பெருமை சேர்ப்போம்
அவர்களை நாம் கௌரவிப்போம் ...............

இளைஞர்கள் அனைவரும் ராணுவம் போவோம்
இந்திய எல்லை நாமும் காப்போம்
நமக்கு கிடைத்த வாய்ப்பு அதை
நாமும் பற்றி பாரதம் காப்போம் ............

போரில் இறந்த வீரன் குடும்பத்தை
பொறுப்போடு காத்து விசுவாசம் புரிவோம்
ஊனமுற்ற வீரர் எவர்க்கும்
ஒவ்வொரு மனிதரும் உதவிகள் புரிவோம் ............

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Jul-13, 1:20 pm)
பார்வை : 6323

மேலே