அம்மா உன்னை நினைத்து !

அவசரத்தில் கிளம்பி கொண்டிருந்தேன்
ஆனாலும் என்னை கவிதை எழுத சொன்னாய்
நினைக்கும்போது பாசம் மறக்காமல் இருக்க

"நீ "என்று நீட்டாமல் விரலை
நிதானமாக எழுதி வைத்து
ஒற்றை எழுத்தாய் ஓடி வந்தேன்
மூன்று வருட ஒப்பந்தத்தில் இங்கு
வெளிநாட்டின் வேதனைக்கெல்லாம்
விமோசனமாய் " நீ " தான் தாயே
நினைக்கும்போது பாசம் மறக்காமல் இருக்க
நினைத்து கொண்டேன் நான் எழுதிய கவிதை

எழுதியவர் : . ' . கவி (17-Dec-10, 7:43 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 622

மேலே