ஓங்கிய ஒலியில் ஓய்வா

களைப்பின் வந்த தூக்கமா
கவலையின் உச்சத்திலா
உழைத்த்தால் வந்த அயர்வா
உளைச்சலின் விளைச்சலா
உண்டதன் விளைவின் மயக்கமா
அளவில் அதிகமான போதையா
களவு போன மகிழ்ச்சியா
ஓங்கிடும் ஒலியில் ஓய்வா
தாங்கிடா துயரின் முடிவா
உறங்கிடும் உள்ளத்திற்கே
விளங்கிடும் உண்மை !
இடம் மாறி உறங்கிடும்
இவரை கண்டும் காணாது
எதிர்வரும் புகைவண்டியை
ஏறெடுத்தும் பார்க்காமல்
கடந்து செல்லும் கால்கள்
ஆபத்தை அறியாத உயிர்கள் !
பழனி குமார்