புடுபுடு என புளுகும் குடுகுடுப்பைக்காரன்
நல்லகாலம் பொறக்குது!
நல்லகாலம் பொறக்குது!!
நம்ம நாராயணன் அய்யாவுக்கு;
நல்லகாலம் பொறக்கப்போகுது!
நல்லகாலம் பொறக்கப்போகுது!!
அட; எம்பேரு உனக்கெப்படி தெரியும்?
அருமையா பாப்பியா ஜோசியம் ?
அன்னலட்சுமி என்னத்தேடி எப்போ வருவா?
அய்யம்மில்லாமச் சொல்லு பாக்கலாம் !
நெத்தியில நாலுக்கோடு – எனவே
நாராயணன் உம் பேரு ! – நீ
நலுங்காம அலுங்காம வாழறது சுத்த போரு!
ஆடியில உன்னத்தேடி அதிர்ஷ்ட்டலட்சுமி வருவா!
அவசரப்பட்டு ஓடாம
உன் வீட்ட சுத்தி சுத்தி வருவா !
இத்தனை நாளா உன் ராசியில
சனி குறுக்கிட்டதால – நீ
புத்திமாறி பித்துப்புடிச்சி பரதேசியான;
இன்னிக்கி முதல் சனி உன்னை
விட்டு விலகுவதால – உன்
ராசிநாதன் சூரியனுக்கு யோகம்தான் இனிமே!
கொடிமர உச்சிக்கு உன்வாழ்வு ஏறப்போகுது-அதை
எறக்கிவிடும் ஆளூங்களுக்கு சாவு வரப்போகுது
குடும்பத்தில் குழப்பங்கள் இனி இருக்காது – உன்
குழந்தைங்கள வியாதிக இனி அன்டாது
இதுவரை தொந்தரவு தந்தவனெல்லாம்
இனிமே தொலைதூரம் ஓடிப்போவான்
தொலைநோக்கு பார்வைக்கூட
இனி எவனும் பார்க்கமாட்டான்
மோட்டுத்தெரு நாராயணனுக்கு;
யோகம் அடிச்சிருச்சின்னு
மோகனூர் ஜனங்களெல்லாம்
மோளம் அடிக்கப்போகுது!
நான் சொன்ன வாக்குக
மோசம் போகாது
எனக்கு நாலு படி அரிசி
நீ அளந்துப்போடு!
நான் மறுபடியும் தேவைப்பட்டா
நாவலூரூ வந்துப்பாரூ!
நான் சொன்னதெல்லாம் நடந்துப்புட்டா
நாலணா கடுதாசி எனக்குப்போடு !
நீலவான சூரியன நித்தமும் நீ வணங்கு!
நீ நெனச்சதெல்லாம் ஜெயமாகும்
நிம்மதியக தூங்கு!
இப்போதைக்கு எனக்கு தேவை
நான் சொன்னதுக்கு காசு!
நீ வாரி கொடுத்துப்புட்டா
நான் பறப்பேன் அடுத்த வீட்டில் புளூக .
................................................................................................................