விலை போகின்றான் தமிழன் - ஏன் இந்த நிலை ?

மனதின் வழி வாசம் வீசும்
மல்லிகை மணம் தோற்கும்
மகிழ்ச்சித் தேன் இதழ் ஊற
மலர்ந்திருக்கும் தமிழ் மலராம்.....!!!!
நுனி நாக்கில் விஷ மேற்றி
நச்சென்றே கொத்தியதாம்
தமிழன் எனும் நாகப் பாம்பு
தான் சிரித்தே பிற மொழியில்.....!!!!!
மூச்சுத் திணறி சாகிறான் இவன்
முழுத் தமிழை பேசுதற்கு - தமிழழகை
முக்காடு போட்டு மறைக்கின்றான்
முறையின்றி ஆங்கிலக் கந்தையாலே...!!!
ஆங்கிலமே மன்னித்து விடு
அவசரமாய் வார்த்தை உதிர்த்து விட்டேன்
அடுத்த மொழியையும் போற்றுவதே அருந்தமிழனின் குணமாகும்.....!!!!
எனினும்
சங்கம் வளர்த்த எங்கள் தமிழ் உன்னிடம்
சங்கு நெரிபட்டு சாவதும் ஏன் ?
சரித்திரத்தை புரட்டுகின்றேன் நான்....
சந்தோசமாய் தமிழன் விலை போய் இருந்தான்....