தமிழாட்சி!

கும்மிப்பாட்டு.
கும்மியடி பெண்ணே கும்மியடி -நல்லா
குனிந்து நிமிர்ந்து கும்மியடி.
அம்மா சக்தி பேரைச் சொல்லி-கை
அடிச்சிப்ப் பாடிக் கும்மியடி
அடைந்து கிடந்த பெண்ணல்ல--அந்த
அடிமைப் பட்ட பெண்ணல்ல
பாரதிப் புலவன் கனவிலே-புதுமை
பழகி வந்தோம் கும்மியடி.
அம்மி அரைத்த பெண்ணல்ல--சிறை
பம்மிக் கிடந்த பெண்ணல்ல
பாவலராம் பாரதிதாசன் -சமம்
பயின்று வந்தோம் கும்மியடி.
வீட்டைக் கழுவிய பெண்ணல்ல-அடுப்பு
வேலை செய்த பெண்ணல்ல
பெரியார் கேட்ட விடுதலை-இன்று
பெற்றே வந்தோம் கும்மியடி.
ஆகாயத்தில் பறக்கிறோம்-கடல்
அடிக்குச் சென்றும் ஆய்கிறோம்
ஆணுக்கு நிகர் ஆகினோம்--எல்லாம்
ஆக்க வந்தோம் கும்மியடி.
கோழையந்தப் பெண்ணல்ல--வன்
கொடுமை தாங்கிய பெண்ணல்ல
வாளெடுத்தும் சுழற்றுவோம்--தீயும்
வதைப்போம் என்றே கும்மியடி.
தமிழீழம் வென்றதென்றே--ஆடி
தலை நிமிர்த்திப் பாடுவோம்.
அமுதமாம் தமிழே அங்கே--அரசு
ஆளுதென்றே கும்மியடி.
கொ.பெ.பி.அய்யா.