சாதியில் சமாதியாகும் தமிழர்
தாய் தமிழை தரைமட்டமாக்கிவிட்டோம்
தமிழ் பண்பாட்டை பறிகொடுத்துவிட்டோம்
தமிழ் மக்களை மரணிக்க வைத்துவிட்டோம்
தாய் மண்ணை மறந்துவிட்டோம்
தமிழ் வரலாற்றை வீழ்த்திவிட்டோம்
தமிழுனர்வை முற்றிலும் மழுங்கடித்துவிட்டோம்
ஆனால்..........................
சாதியை மட்டும் சிக்கென பிடித்துக் கொண்டோம்
சாதிக்கு தனி சாமிகளை படைத்தோம்
சாதிகென்று கோயில்கள் அமைத்தோம்
சாதியை காக்க சடங்குகள் உருவாக்கினோம்
சாதி விழாக்களுக்கு பணத்தை வாரி இறைத்தோம்
சாதி ஊர்வலங்களில் உறைந்து போனோம்
சாதியை காக்க உயிரையும் தந்தோம்
சாதியால் வந்தது தீண்டாமை
சாதியால் வந்தது ஏற்ற தாழ்வு
சாதியால் வந்தன காலணிகள்
சாதியால் வந்தன பிரிவுகள்
சாதியால் வந்தன பிளவுகள்
சாதியால் வந்தன மோதல்கள்
சாதியால் வந்தன கௌரவ கொலைகள்
அகநானுறு சொல்லும் காதல் வீழ்ந்தது
புறநானூரு கூரும் வீரம் கோழையானது
திருக்குறள் சுட்டும் அறவாழ்க்கை அகன்று போனது
நாலடியாரின் நற்போதனைகள் நலிந்துவிட்டன
தமிழர்களை பார்க்க முடிவதில்லை இப்போது
பெயருக்கு பின்னால் சாதி பட்டம் இட்டு வரும்
சாதி வெறியர்களைத்தான் பார்க்க முடிகிறது
சாதியில் சஞ்சரித்து, சாதியை காக்க
சக தமிழர்களின் இரத்தத்தை
உறிஞ்ச நினைக்கும் தமிழர்களே
நாம் சம்மாதிக்கு செல்லும் நாள் தொலைவிலில்லை