நடந்ததெல்லாம் நாடகமா ?
![](https://eluthu.com/images/loading.gif)
ஆணுக்கும் பெண்ணுக்கும் தான்
திருமணம்
ஆனாலும் அது கலப்பு மணம்...!
பிரிவாற்றாமையால் ஈந்ததென்னவோ
இன்னுயிர்
ஆனாலும் அது நாடகக் காதல்...!
காதலைக் கொன்றதெல்லாம்
சாதி
ஆனாலும் அது சமூக நீதி...!
சாதிக்காகச் சாவதெல்லாம்
கேவலம்
ஆனாலும் அது கௌரவம்...!
அன்றும் இன்றும் நடந்ததெல்லாம்
அதர்மம்
ஆனாலும் அது தருமபுரி...!