பிச்சைக்காரி
பகல் இல்லை...
பால் நிலவும் சுகமில்லை...
தாயென்று என்ன பயன்...?
தந்தையென்று என்ன பயன்...?
தாவரம் கொள்ளும் வாழ்வு கூட
தரணியில் எமக்கு அமையவில்லை
தீவினில் நான் ஜனித்திருந்தால்
தண்ணீரை அருந்தி வாழ்ந்திருப்பேன்
தீவினை ஏதும் கற்றிருந்தால்
திருடியாவது பிழைத்திருப்பேன்
தெய்வம் செய்த பாவங்களின்
பிரதிபலனாய்
நாள்தோறும்...
நடைபாதையோரம்
நான் பிச்சைக்காரி........