வன்முறைக்கு எல்லை இல்லை

வன்முறைக்கு எல்லை இல்லை
வன்மத்திற்கு வயதும் இல்லை !
சாதியும் மதமும் சரிபாதி
சச்சரவும் மோதலும் மிச்சமீதி !
நாளும் நடைபெறும் காட்சியிது
நாமும் வருந்திட சாட்சியிது !
கட்சிகள் அறிந்தே தூண்டுவர்
காரணம் அறியாதவர் மாள்வர் !
வீதிகளே விளையாட்டுத் திடல்
வெட்டி வீழ்த்திடும் வீணர்களுக்கு !
பழியும் பகையுமே வளருது நாளும்
பாசமும் நேசமும் தேயுது தினமும் !
விடிவுதான் இல்லையா நமக்கு
முடிவுதான் எப்போது இதற்கு !
சிந்தியுங்கள் சிந்தை உள்ளோரே
விழியுங்கள் எதிர்காலம் ஏற்றமுற !
பழனி குமார்