ஒரு கோப்பை மழை ....!!!

சன்னல் வழி சாரலில்
இலையோடு சேர்ந்து
நாமும் நனைந்தோம்..!!

யாருமற்ற அறையில்
மழையோடு -நாமும்
உறங்கினோம்..!!

உன் கண்கள் கொண்டே
விடிந்து கொண்டிருந்தது
நம் அறை..!!

கைபேசி வெளிச்சத்தில்
பிரம்மாண்டமாய் விழுந்தது- நம்
விரல்களின் பிம்பம்..!!

விடியும் வரை
விடாமல் பொழிந்தது
மழை..!!

விட்ட பின்பும் விடாமல்
பொழிந்து கொண்டே இருந்தாய்..!!

உன் சப்த சிணுங்களில்
நின்று போனது கடிகாரம்..!!

கடிகாரம் இல்லா காலம்
ஓடிக் கொண்டே இருந்தது..!!

விடிந்த பின்பு
மழை விட்டது..!!

விடிந்த பின்பும் - நாம்
பொழிந்து கொண்டே இருக்கிறோம்..!!

ஆதலால் காதல் செய்வீர்..!!

எழுதியவர் : விக்கி பிரசன்னா (11-Jul-13, 12:05 am)
சேர்த்தது : vikki prasanna
பார்வை : 45

மேலே