ஒரு கோப்பை காதல் ..!!
தேகம் எங்கும் கண்கள் விதைத்து- என்
நாணத்தை மூடச் செய்யும்
பார்வை அவளுக்கு.
பட்டாம் பூச்சியின் சிறகை கீறி
வர்ணம் பூசிக் கொள்ளும்
வானவில் பூச்சி அவள்.
தண்டவாள கண்களில்
சத்தமில்லாமல் நகரும்
தாவணி ரயில் அவள்.
இலை நரம்பினில்
மெல்ல ஊரும்
நீர்த்துளி அவள்..!!
சொல்லப் போனால் -அவள்
முடிக்கபடாத கவிதை..!!
ஆதலால் காதல் செய்வீர்..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
