கோழியா? முட்டையா?
சேவல் கூவியும்
சூரியன் உதிக்கவில்லை
முன்பனிக்காலம் !
அன்றும் சேவல் வழக்கம் போல்
விடியலுக்கு அழைப்பு விடுத்து
கசாப்பு கடைக்குப் பயணித்தது !
கோழி மிதித்து குஞ்சு முடமானது
இரண்டும்
வறுவலுக்குத் தயாரானது !
"போ போ" கோழியை அழைத்து
தானியங்கள் போட்டான்
மறுநாள் மதிய விருந்தாகியது !
கோழி ஒன்றுதான்
பிரியாணிக்குதான் பல பெயர்கள்
ஹைதராபாத், ஆற்காடு, அஞ்சப்பர் ....
டாஸ்மாக் பக்கத்தில்
பிரியாணிக்கடை
பிழைக்கத் தெரிந்தவன்!
இதுதான் பாவ புண்ணியமோ ?
ஒரு கோழி கைஏந்தி பவனில்
மற்றொன்று பைவ் ஸ்டார் ஒட்டலில் !
கோழியிலிருந்து முட்டையா ?
முட்டையிலிருந்து கோழியா?
இரண்டுமே பிரியாணியில்!