ஒரு தாயின் தாலாட்டு

ஒரு தாயின் தாலாட்டு
மனம் ரசிக்கும் ஒரு பாட்டு
ரசித்திட நீ கேட்டு தொடங்கு
உறங்கிடும் விளையாட்டு

கனவின் உருவங்களாய்
நிழலின் வடிவங்களாய்
காற்றுக்கும் இருந்துவிட்டால்
நீ எப்படி சுவாசிப்பாய்

தாய்பாசமும் அதுபோல்தான்
இருக்கையில் தெரியாது
தேடினால் கிடைக்காது
தொலைத்தால் வாராது

தெய்வம் உண்டென்றால்
தாயின் உருவம் என்பேன்
மீண்டும் வாய்பிருந்தால்
கருவில் குடியிருப்பேன்

எழுதியவர் : ருத்ரன் (11-Jul-13, 8:16 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 92

மேலே