காதல் இரத்த ஓட்டம்

மிதிவண்டியின் வேகத்தில்
நடுநடுங்கி அரை காற்றோடு
ஓடியது சக்கரங்கள்

இரண்டு முறை வந்துவிட்டது
உன் தவறிய அழைப்பு
மூன்றாவது வந்துவிட்டால்
உன் முகம் காண முடியாது

நீ போன வழியெங்கும்
உன் வாசனையை பரப்பி வைத்திருக்கிறாய்
எதனாலையோ என்னால் மட்டுமே
அதை நுகர முடிகிறது

உன் கொலுசு சத்தம்
மெதுவாய் கேட்க
உன் மூன்றாவது தவறிய அழைப்பு
அலறிவிட்டது

என்ன செய்வது
உன் முகம் காண முடியாதோ என்று
நெஞ்சை தடவும் போது
நான்கு அடி தூர வளைவில்
பொடி நடையில் நீ

சிறு இடை வெளியில் நாம்
சீரான வேகத்தில் என் இரத்த ஓட்டம்

உன்னை கடக்கும் போது
எல்லை கடந்துவிட்டது
கொஞ்சம் நிதானம் இழந்துவிட்டது

உன் பார்வையில் விளிம்பில் பட்டு
மிதிவண்டியோடு சிறிது
தள்ளாடி போனேன்

தலைகோதுவது போல்
என்னை பார்த்தாய்
நானோ தலை தொங்கி போனேன்
காதல் மயக்கத்தில்

காலையில் காதல் போதை
தலைக்கு ஏற்றிவிட்டாய்
எங்குபோய் இனி நான் மந்திரிக்க

சில அடி
தூரத்தில் புன்னகையோடு
விடை பெறுகிறாய்

நான் மட்டும்
விடைசொல்ல முடியாமல்
மௌனம் பேசியபடி.....

எழுதியவர் : பாலமுதன் ஆ (12-Jul-13, 12:44 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 106

மேலே