வாழ்வை தொலைத்தவர்கள்...
அயல் நாட்டு பணியினிலே
மோகம் கொண்டாச்சு
மனிதனோட வாழ்வெல்லாம்
இயந்திரமா போச்சு !!!!
ஆறிலக்க ஊதியம்தான்
மாதம் என்றாச்சு
மனைவி மக்கள் உறவெல்லாம்
தனித்தனியா போச்சு!!!
அன்பு பாசம் எல்லாமே
அளவு குறைந்து போச்சு
உறவுகளின் பேச்செல்லாம்
கைபேசி / ஸ்கைப் வழியாச்சு!!!
குழந்தை வளர்ந்து வாழ்வதெல்லாம்
காப்பகத்தில் அன்றோ - அவர்
குழந்தை பருவம் முழுவதுமே
செவிலித் தாய் வளர்ப்பில் நன்றோ!!!
பிறந்த குழந்தை மூன்று வயது
பேசவில்லை இன்னும்
குழந்தையோடு பேசுதற்கு ஆளுமில்லை
பேச்சும் வரவில்லை!!!
நீண்ட நாட்கள் பிரிவினிலே
உறவின் முகமும் மறந்து போச்சு
யாரென்று தகப்பனையே
குழந்தை கேட்கும் நிலையாச்சு!!!
வயது முதிர்ந்த வேளையிலே
திரும்புதொரு கூட்டம்
அயல்நாடுதிர்த்து திரும்புதைய்யா
தாய் நாட்டினில் மேல் நாட்டம்!!!
ஈன்ற பிள்ளையோடு சேர்ந்து வாழ
பெற்றோர் வாசல் தொட்ட நேரம்
மகனும் வெளிநாடு கிளம்பிவிட்டான்
பணம் ஈட்டும் இடம் சொர்க்கம்????
அப்பன் வழி பிள்ளையென
இது தொடர்கதையா போச்சு
தாய் பிள்ளை அன்பு பாசமெல்லாம்
பணத்திற்கே தாரைவார்த் தாச்சு!!!
பணம் ஈட்டுதற்கு மட்டும்
இந்த பிறவி வேண்டுமா???
பந்தபாசம் தொலைத்த பின்னால்
வாழ்வும் ஒரு வாழ்வுமாகுமா???
அன்னை தந்தை பிள்ளையோடு
அத்தை மாமன் உறவு
பாட்டன் பாட்டி பேரனென்று
வாழும் வாழ்க்கை நிறைவு!!!
நினைவில் கொள்வீர் அனவருமே
பிறந்த தேசம் சொர்க்கம்
சொந்த பந்தத்தோடு சேர்ந்து
வாழுவதே இன்பம்!!!