வயலும் வரப்பும்
வயலும் வரப்பும் இருந்தது ஒருகாலம்
பசுமை நிறைந்து பார்வை குளிர்ந்தது !
சிறார்கள் விளையாட சீரான ஒரு பாதை
பெரியோர்கள் நடந்து பழகிய பாதை !
வரப்பில் நடந்தால் வயதும் மறந்திடும்
வாய்க்காலை கடந்திட வேகம் பிறக்கும் !
சாலையில் காணாத தொடர் வண்டி இது
வயற்பரப்பில் இணைந்த இதயங்கள் இது !
வயலை இனிநாம் வாழ்வில் காண்போமா
உழவுவே இன்று வினாக்குறியாய் ஆனதே !
பழனி குமார்