தீயின் பல வகை

தீ அணைக்கக் கூடியது - சா
தீயும் அணைக்கக் கூடியது. - அந்தத்
தீ நீராலும் மண்ணாலும்
தனியக் கூடியது. - இந்தத்
தீ போட்டியாலும் பொறாமையாலும்
தலை விரித்து ஆடியது - ஆம்
தீ ஒளியும் தரும் ஒழிக்கவும் வரும்

இருண்ட வீட்டில் தீ மூட்டினால்
இணையில்லா ஒளி தரும்.
இணையும் மனங்களில் தீ மூட்டினால்
இடைவேளை இல்லாமல் கருக வைக்கும்

தீ பட்ட திரி தீபமாகும் - சாதி
தீ பட்ட சமுதாயம் சரிவாகும்
சாதி அடிப்படையில் தீ வளர்ந்தால்
சமுதாயம் மெல்ல மெல்ல கருகும்

பயந்த மனதை தெளியவைக்கும் அந்தத் தீ
பயத்தை தவிர உதரவைக்கும் இந்தத் தீ
அந்தத் தீ அணைக்க உதவும் ஒளித் தந்து.
இந்தத் தீ அணைக்க வரும் அழிவைத் தந்து.

அந்தத் தீயில் சதி இருக்காது
இந்தத் தீயில் சதியைத் தவிர நன்மை இருக்காது
பஞ்ச பூதங்களில் ஒன்று அந்தத் தீ
பஞ்சமா பாதகங்களில் ஒன்று இந்தத் தீ

கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கலாம் - சாதியால்
கொழுந்துவிட்டு எரியும் தீயாலும் - வளரும் சமுதாயத்தை அணைக்கலாம்
தீ அணைக்க வந்ததா? அழிக்க வந்ததா? - ஓ
மனிதா நீ எந்தத் தீயை மூட்டுகிறாய்?
ஒளிவரும் தீயை மூட்டு. - உன்னை
ஒழிக்க ஒளிரும் தீயை பூட்டு.

சாதி இரண்டொழிய வேறில்லை - அது
ஆண் சாதி பெண் சாதி - பிறகு
எப்படி வளர்ந்தது பலவகை தீ
உணர்வுக்குள் தீ மூட்டு ஆக்கப் பூர்வமானத்தை
உணர்வுக்குள் கட்டுப்படுத்து
அழிக்கப் பூர்வமானத்தை - சுதந்திரக்
காற்றில் ஒளித் தெரியட்டும் - அந்தத் தீயை
அணைத்துக்கொள் - எல்லாம் ஆரம்பம் ஆகும்
இந்தத் தீயை தனிய வைத்துக் கொள்
அழிவுகள் எல்லாம் அடங்கிப் போகட்டும்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன் (16-Jul-13, 6:39 am)
சேர்த்தது : s.sankusubramanian
Tanglish : theeyin pala vagai
பார்வை : 168

மேலே