எனக்கு இத்தனை தண்டனைகளா..?

முண்டாசு கட்டியவன் என்னை
மேலும் கீழும் பார்த்தான்

மீசைய முறுக்கிகிட்டொருத்தன் என்னை
முறைச்சு முறைச்சு பார்த்தான்

பேண்டு சூட்டு போட்டவனொருத்தன்
என்னையொரு சைசாப் பார்த்தான்

காலேஜ் ஸ்டுடென்ட் ஒருத்தன் என்னை
கேலி செய்தே பார்த்தான்

அருகே வந்தொருத்தன் எவ்வளவு
என்றும் கூடக் கேட்டான்

அடுக்கடுக்காய் பார்வைகளும்
கேள்விகளும் கேலிகளும்
என்மேல் பாய்ந்தாலும்
பயமின்றி பல்லைக் கடித்தவாறே
என் மனசுக்குள்ளே குமுறினேன்

"அடப் பாவிங்களா என்
கணவர் வரத் தாமதம்
ஆனதற்கு எனக்கு
இத்தனை தண்டனைகளா
நீங்களாம் நல்லா
இருக்கமாட்டிங்கடா
நாசமா போயிருவீங்க.."

எழுதியவர் : சங்கை முத்து (16-Jul-13, 5:00 pm)
சேர்த்தது : Sangai Muthu
பார்வை : 78

மேலே