என் அப்பா !
அப்பா !!
அன்னையின்
ஆதாரம்
அனுபவத்தின்
ஆணி வேர்
முகவரிகளின்
மூலப்பொருள்
வளர்ச்சியின்
வழிகாட்டி
தேய்ந்துபோன
தேக்குமரம்
பாசச்
சுமைத்தாங்கி
ஓய்ந்துபோன
உழைப்பு !!
கனவுகளுக்கான
காசோலை
தரித்திர மகனுக்கான
சரித்திர விதை
சிரிப்பாய் வாழ்ந்து
அழும் வரலாறு !!!