வேண்டும்! வேண்டும்!!
ஆடுகின்ற ஆட்டம் அறிவினைத் தரவேண்டும் !
ஓடுகின்ற நதியெல்லாம் ஒன்றிணைக்கவேண்டும் !
வாடுகின்ற ஏழை வளம்பெற வேண்டும்!
!தேடுகின்ற பொருள் புண்ணியம் தர வேண்டும்
கூடுகின்ற கூட்டம்
குறைத்தீர்க்க வேண்டும் !
நாடுகின்ற நண்பர்
நன்மை செய்ய வேண்டும் !
நீடுபுகழ் நிலைக்க
வறியவர்க் கீதல் வேண்டும்
பாடுகின்ற பாட்டு படிப்பினைத் தர வேண்டும் !
எல்லோருக்கும் படிப்பினை
தரவேண்டும் !!