விதியினை விரட்டு !

தடைகள் வரினும்
தளராமல் உழைக்கணும்
விதியினை விரட்ட
விடாது முயற்சி செய் !
தொடர்ந்து உழைத்தால்
ஊழையும் (விதியையும்)துரத்தி
வெற்றிகாணலாம்
வெற்றிக்கு வழி என்றும் வள்ளுவம் !!
*******************

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாத் உஞற்று பவர் (திருக்குறள் 620)

********************

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (18-Jul-13, 12:17 am)
பார்வை : 91

மேலே